தமிழகம்

7 வருட காதல்.!மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய இளைஞர்! கடைசியில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Karur devi kannan

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் 30 வயதான தேவி. மாற்றுத்திறனாளியான ஆன தேவி அதே பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அந்த காப்பகத்திற்கு அடிக்கடி அன்னதானம் செய்ய புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்பவர் வந்து சென்றுள்ளார்.

முதலில் இருவருக்கும் இடையே கொடுத்தல், வாங்கல் என்று இருந்தது. பின்னர் நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் கண்ணன் தேவியின் குடும்பத்தினரிடம் திருமண ஏற்ப்பாடுகளை செய்யுமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் திடீரென ஒரு நாள் திருமணத்தை திருத்துமாறு கண்ணன், தேவியின் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சியான தேவி அதன் பிறகு தான் கண்ணனை பற்றி விசாரிக்க தொடங்கியுள்ளார்.

அப்போது கண்ணனுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆனது தெரியவந்துள்ளது. தேவி இந்த தகவல் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதனை அடுத்து போலீசார் கண்ணனை ஆறு பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். 


Advertisement