மாவோயிஸ்டாக 15 வருடம் தலைமறைவு வாழ்க்கை.. வாழ விரும்பி 45 வயதில் சரணடைந்த பெண்.!

மாவோயிஸ்டாக 15 வருடம் தலைமறைவு வாழ்க்கை.. வாழ விரும்பி 45 வயதில் சரணடைந்த பெண்.!Karnataka Shivamogga Native Maoist Sandhya Ails Prabha Surrender TN Tirupattur Police Station

கடந்த 15 வருடத்திற்கும் மேலாக மாவோயிஸ்ட்டாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பெண், கணவரின் கைதுக்கு பின்னர் மனம் திருந்தி வாழ விரும்பி காவல் அதிகாரிகள் முன்பு சரணடைந்தார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தை சார்ந்தவர் பிரபா என்ற சந்தியா (வயது 45). இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஆவார். கர்நாடக மாநிலம் மற்றும் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்புக்காக பல வருடமாக பணியாற்றி வந்துள்ளார். 

நேத்ரா, மாது மற்றும் விண்டு என்று பல்வேறு பெயருடன் வலம்வந்த பிரபா, கடந்த 2006 ஆம் வருடத்தில் இருந்து தலைமறைவானார். இவரின் மீது கர்நாடகாவில் 44 வழக்குகள் பதிவாகியுள்ளன. 

Tirupattur

கர்நாடக மாநிலத்தில் தேடப்படும் மாவோயிஸ்டாக இருந்த பிரபாவின் தலைக்கு, அம்மாநில அரசு ஐந்து இலட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்து இருந்தது. மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த பிரபாவின் கணவர் பி.ஜி கிருஷ்ணமூர்த்தி மீது 25 வழக்குகள் உள்ளன. 

Tirupattur

இவரை கடந்த நவ. 1 ஆம் தேதி கேரள மாநில காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பிரபா என்ற சந்தியா மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து வெளியேறி, பொதுசமூகத்துடன் அமைதியாக வாழ விரும்பி திருப்பத்தூர் மாவட்ட கியூ பிரிவு அதிகாரிகளிடம் உதவி கேட்டு தஞ்சம் புகுந்தார். அவரது மறுவாழ்வுக்கு தேவையான உதவியை சட்டப்படி அதிகாரிகள் செய்தனர்.