மனைவி, பிள்ளைகளை கடத்தி சென்ற மந்திரவாதி.. 6 மாதமாக கண்ணீரில் தவிக்கும் கணவர்.!



Kanyakumari Wife Daughters Missing Case

புதையல் எடுத்துத் தருவதாக மனைவி மற்றும் மகளை கடத்திச் சென்ற மந்திரவாதியை 6 மாதமாக கணவர் தேடும் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் மணிக்கட்டி பொட்டல் உடையப்பன் குடியிருப்பை சேர்ந்தவர் பிரகலாதன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதிகள் இருவருக்கும் அனீஸ் மற்றும் தனிஷ்கா என்ற மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில், சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய நிலையில், பிரகலாதன் தனது மனைவி மற்றும் மகள்களை தேடியபோது அவர்கள் காணவில்லை. 

kanyakumari

வீட்டிற்கு அருகே வசித்து வந்த மந்திரவாதி தங்கபாண்டியன் என்பவர், புதையல் எடுத்துத் தருவதாக கூறி அவ்வப்போது மனைவியிடம் கூறியதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் மந்திரவாதி தனது மனைவி மற்றும் மகள்களை கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை யாரும் கண்டறியப்படவில்லை. இதனால் பிரகலாதன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்,