ஒரே நொடி.. சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த உதயம் திரையரங்கம்; நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!
குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் இளைஞர் தற்கொலை; திருமணமான 3 மாதத்தில் நடந்த கண்ணீர் சோகம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார், வட்டவளை பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தகுமார் (வயது 35). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஆனந்த குமாரின் மனைவி சித்ரா.
தம்பதிகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. புது மாப்பிள்ளை ஆனந்தகுமார் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்த நிலையில், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனை மனைவி சித்ரா கண்டிக்கவே, இருவருக்கும் அவ்வப்போது குடும்பத்தகராறு நடந்ததாக தெரிய வருகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டிற்கு மதுபோதையில் ஆனந்தகுமார் வந்த நிலையில், சித்ரா கோபம் அடைந்து தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் மனவேதனையுடன் இருந்த ஆனந்தகுமார், அம்மன் கோவிலின் பின்புறம் விஷம் கொடுத்து மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பரிதாபமாக பறிபோனது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை மதுப்பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.