தமிழ்நாட்டை உலுக்கிய நாகர்கோவில் காசி விவகாரம்; ஜாமின் தள்ளுபடி.. மதுரை கிளை அதிரடி.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த காசி, சமூக வலைத்தளங்களில் தன்னை நல்லவன் போல பிம்பப்படுத்தி, பல பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய சம்பவம் குறித்து புகார் எழுந்து, பெரும் விவாதத்தை தமிழக அளவில் உருவாக்கி இருந்தது.
இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்களின் அந்தரங்க விடியோவும், வெளிநாட்டில் இருந்த அவனின் நண்பனால் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, காசிக்கு எதிரான குற்றவழக்கு சிபிசிஐடி வசம் சென்று, விசாரணை தீவிரம் அடைந்தது.
இதையும் படிங்க: 17 வயது சிறுமி கர்ப்பம்; 21 வயது இளைஞன் போக்ஸோவில் கைது.. காதல் பெயரில் கட்டாயப்படுத்தி அத்துமீறல்.!
ஜாமின் மனு தள்ளுபடி
விசாரணையை தொடர்ந்து, காசிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனிடையே, தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மதுரை உய்ரநீதிமன்ற கிளையில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், காசிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர். அவரின் கோரிக்கை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் பதில் மனுதாக்கல் செய்யவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவிகளை சீரழித்த மருத்துவர்; முறுக்கிக்கொண்டு செய்தியாளர்கள் மீது பாய்ச்சல்.!