காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலன்! அதிர்ச்சி காரணம்!
என்னதான் உண்மையான காதல் ஒருபக்கம் இருந்தாலும் பல நேரங்களில் காதலித்தவர்களே தங்களது காதலுக்கு துரோகம் செய்யும் சம்பவங்களும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கன்யாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே காதலித்த பெண்னின் அந்தரங்க புகைப்படங்களை காதலர் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்யாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே சூலூரை சேர்ந்தவர் நவீன். ஆட்டோ ஓட்டுநராக இவரது ஆட்டோவில் தினமும் ஒரு இளம் பெண் பயணித்துள்ளார். இவர்களுக்குள் பேச்சுவார்த்தை ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதும், நெருக்கமாகவும் இருந்துவந்துள்ளனர்.
இந்நிலையில் நவீன் வேலைக்காக வெளிநாட்டு சென்றுள்ளார். அந்த சமயம் இந்த இளம் பெண் வேறொரு வாலிபருடன் தொடர்பில் இருந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நவீனுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தனது காதலியை பழிவாங்க நினைத்த நவீன் அவருடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதை அறிந்த அந்த இளம் பெண் இதுகுறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை நவீனை கைதுசெய்து சிறையில் அடித்துள்ளனர்.