வேலைக்கு செல்லாமல் கடன் வாங்கி செலவு.. திருமணமான 10 ஆண்டுகளில் கணவன் - மனைவி விபரீதம்..!kanyakumari-husband-wife-suicide-due-to-loan-debt-issue

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம், சூரியகோடு பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஐசக் (வயது 35). இவரின் மனைவி சந்தியா (வயது 32). தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆனாலும் குழந்தைகள் இல்லை. ஐசக் சரிவர வேலைக்கு செல்லாமல் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். மேலும், வீட்டு தேவைக்காக சுய உதவிக்குழுவிலும் கடன் வாங்கி இருக்கிறார். 

பணம் கொடுத்தவர்கள் பணத்தை ஐசக்கிடம் கேட்டு தொந்தரவு செய்தும் கிடைக்காததால், அவரின் மனைவி சந்தியாவிற்கு தொடர்பு கொண்டு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் கணவன் மனைவியும் வருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், சந்தியாவின் அக்கா நேற்று சந்தியாவிற்கு பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. 

இதனால் நேரில் சென்று வீட்டினை பார்க்கையில், சந்தியா தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் ஐசக்கும் விஷம் குடித்து மரணித்து சடலமாக இருந்துள்ளார். 

இருவரின் உடலையும் மீட்ட காவல் துறையினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.