கன்னியாகுமரி எக்ஸ்பிரஸை கவிழ்க்க சதி நடந்த விவகாரம்; 8 பேர் பரபரப்பு கைது... வெளியாகப்போகும் உண்மை.!

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸை கவிழ்க்க சதி நடந்த விவகாரம்; 8 பேர் பரபரப்பு கைது... வெளியாகப்போகும் உண்மை.!



Kanyakumari Express Case issue

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில், சுரங்கப்பாதைக்கு அருகே இருக்கும் தண்டவாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி டயர் வைக்கப்பட்டு இருந்தது. 

இதனால் அவ்வழியே சென்ற சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கவிருந்த நிலையில், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. 

ஆனால், விபத்தில் இரயிலின் முதல் 4 பெட்டிகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அரைமணிநேரம் தாமாக கோளாறு சரி செய்யப்பட்டு இரயில் இயக்கப்பட்டாலும், ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டால் விபத்து தவிர்க்கப்பட்டது. 

கன்னியாகுமரி

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில், இரயிலை கவிழ்க்க சதி செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

சம்பவம் நடந்த பகுதியில் சுரங்கப்பாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருவதால், பலகட்டமாக விசாரணை நடைபெற்று 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் எதற்காக லாரி டயரை தண்டவாளத்திற்கு நடுவே வைத்தனர் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

நன்றி: Way2news