170 கோடிகளை வருமானவரித்துறை கைப்பற்றியது நினைவிருக்கட்டும்.! அப்போ பிக்பாஸ் யார்? திகைக்க வைத்த கேள்வி.!

170 கோடிகளை வருமானவரித்துறை கைப்பற்றியது நினைவிருக்கட்டும்.! அப்போ பிக்பாஸ் யார்? திகைக்க வைத்த கேள்வி.!



kamalhasan talk abut contractors ride

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஆழமாக கால்பதித்துவிட்ட நிலையில், வருகின்ற 2021 சட்ட மன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். இதற்கான பணிகளை கமல்ஹாசன் முழுவீச்சில் தொடங்கிவிட்டார். அரசியல் சுற்று பயணம் சென்றுள்ள அவர் பல விசயங்களை குறித்தும் சமூக வலைதளங்களிலும் மேடைகளிலும் பேசிவருகிறார்.

தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் தொடர்ச்சியாக அதிமுகவை விமர்சித்து வருகிறார். மேலும் எம்.ஜி.ஆரின் வாரிசு என்றெல்லாம் பேசியது சர்ச்சயை ஏற்படுத்தியது. இதற்க்கு அதிமுகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது. நல்லா இருக்கிற குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவர் வேலை. அந்தத் தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுப்போகும், நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டுப்போய்விடும் என்று விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில் முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கமல்ஹாசன் பதிலடி கொடுத்தார். இதனையடுத்து, கமல்ஹாசன் நேற்று அவரது  ட்விட்டர் பக்கத்தில், “நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித்துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.