தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று பார்த்த கமல்ஹாசன்.! என்ன காரணம் தெரியுமா.?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று பார்த்த கமல்ஹாசன்.! என்ன காரணம் தெரியுமா.?


kamal meet mk stalin

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெரும்பாலான சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதால் இந்த படத்திற்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். இப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதையை நிமித்தமாக சந்தித்துள்ளார். மேலும், இனிய நண்பர், அவருடன் எடுத்த புகைப்படத்தையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இனிய நண்பர், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நிகழ்ந்தது. மனமும் நெகிழ்ந்தது.  என குறிப்பிட்டுள்ளார்.