
kalpana chawla award for 3 perambalur women
கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், பவித்திரன், செந்தில்வேலன், கார்த்திக் ஆகிய இளைஞர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்றுப் பள்ளத்தில்விழுந்து சிக்கி கொண்டு உயிருக்கு போராடினார்கள். அவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்த அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி ஆகியோர் இளைஞர்களின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் மூவரும் ஆற்றில் இறங்கி தாங்கள் உடுத்தியிருந்த புடவையை அவர்களது உயிரைக் காப்பாற்றத் தூக்கி வீசி ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு அந்த இளைஞர்களைக் காப்பாற்றப் போராடினர். ஆனால் இரண்டு இளைஞர்களை உயிருடன் மீட்டனர்.
இதையடுத்து இந்த செய்தி வெளியானவுடன் வீரதீர செயல்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு இவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த மூன்று பெண்களையும் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் சென்னைக்கு வழியனுப்பி வைத்தார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு கல்பனா சாவ்லா விருதினை வழங்கி 5 லட்ச ரூபாய் சன்மானமும் வழங்கி பாராட்டினார்.
Advertisement
Advertisement