தாய் கள்ளக்காதலனுடன் இருப்பதை பார்த்த 5 வயது மகன்! மனசாட்சியின்றி மகனுக்கு தாய் செய்த கொடூரம்!

தாய் கள்ளக்காதலனுடன் இருப்பதை பார்த்த 5 வயது மகன்! மனசாட்சியின்றி மகனுக்கு தாய் செய்த கொடூரம்!


kallathodarpu

மதுரை மாவட்டம் டி. கல்லுபட்டி அருகே உள்ள வி. குச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்( 28) -ஆனந்தஜோதி(25) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. மேலும் இவர்களுக்கு ஜீவா (5) மகனும், லாவண்யா (3) மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சிறுவன் ஜீவா பள்ளி சென்று விட்டு வீடு திரும்பி உறங்கியுள்ளான். சிறிது நேரம் கழித்து தாய் ஆனந்தஜோதி மகனை எழுப்பியுள்ளார். ஆனால் மகன் எந்த ஒரு செய்கையும் இன்றி இருந்துள்ளார்.

உடனே அந்த சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அந்த சிறுவன் இறந்து பல மணி நேரம் ஆகியுள்ளது என்றும், சிறுவனின் கழுத்தில் யாரோ கயிற்றை வைத்து கொலை செய்த தடயம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Kallathodarpu

இதனால் தனது மனைவியின் மீது சந்தேகம் அடைந்த சிறுவனின் தந்தை ராம்குமார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் ஆனந்தஜோதியிடம் கடுமையான விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது ஆனந்தஜோதிக்கும், ராம்குமார் உறவுக்காரர் மருதுபாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெருக்கமாக இருந்ததை ஜீவா பார்த்துள்ளான். இதனால் தங்கள் கள்ள தொடர்பு ராம்குமாருக்கு தெரிந்துவிடுமோ என்று நினைத்துள்ளனர்.

இதனால் ஆனந்தஜோதி மற்றும் மருதுபாண்டி இருவரும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த 5 வயது மகனின் வாயை மூடி அந்த சிறுவனின் கழுத்தில் கயிற்றை வைத்து இறுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

Kallathodarpu

அதனை அடுத்து போலீசார் அந்த கள்ளக்காதல் ஜோடியினை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.