14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. மிரட்டி பணியவைத்து கொடூர செயல்.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி சம்பவம்.!

14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. மிரட்டி பணியவைத்து கொடூர செயல்.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி சம்பவம்.!


Kallakurichi Thiyagadurgam 14 Aged Minor Girl Sexual Abused

தியாகதுருகம் அருகே 9 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். சம்பவத்தன்று, சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளார். 

அப்போது, அங்கு வருகை தந்த பிரிதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த அய்யம்பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 27), சிறுமியின் இல்லத்திற்குள் புகுந்து, அவரின் வாயில் துணியை வைத்து அமுக்கி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

மேலும், பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டி சென்றுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி விஷயத்தை பெற்றோருக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

Kallakurichi

இதனை தனக்கு சாதகமாக்கிய மணிகண்டன், மறுநாளும் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மாட்டுக்கொட்டகைக்கு மிரட்டி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி விபரீதத்தை புரிந்துகொண்ட, பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். 

சிறுமியின் பெற்றோர் இந்த விஷயம் தொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சிறுமிகள் பாலியல் தொல்லை, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டால் அருகே உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் அல்லது குழந்தைகள் நலத்துறையினருக்கு 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவிக்கலாம். உங்களின் தகவல் அதிகாரிகளால் பாதுகாக்கப்படும். அவர்கள் விசாரணை செய்து எதிரியின் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.