அரசியல் தமிழகம் கலைஞர் நினைவு நாள்

கலைஞர் கருனாநிதியின் வாழ்க்கை வரலாறு தெரியுமா? இதோ! பல சுவாரசிய விஷயங்கள் உள்ளே!

Summary:

Kalaingar karunanidhi life history in tamil

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் நாள் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நல குறைவால் காலமானார். இந்நிலையில் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில் கலைஞரை பற்றிய ஒருசில தகவல்களை இங்கே காண்போம்.

முத்துவேல் கருணாநிதி சூன் 3, 1924 அன்று திருவாரூர் மாவட்டம் திருகுவளையில் பிறந்தார். இவரது தந்தை பெயர் முத்துவேல், தாயார் பெயர் அஞ்சுகம். இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார்.

பள்ளி இறுதி தேர்வில் தோல்வி அடைந்த கலைஞர் அதன்பின்னர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944ஆம் நாள் உருவாக்கினார். அவரே அதன் தலைவராக பொறுப்பேற்றார். முரசொலி பத்திரிகையை 1942ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் அதன்பின்னர் பல்வேறு போராட்டங்கள், மேடை பேச்சுக்கள், அரசியல், நாடகம், எழுத்து என தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார் கலைஞர்.

அதன்பின்னர் 1960ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். 1969ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தனது மரணம் வரை திமுகவின் தலைவராகவே பதிவியில் இருந்தார் கலைஞர்.

அதன் பின்னர் இவர் போட்டியிட்ட அணைத்து தேர்தலிலும் வெற்றிபெற்றார். 957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். பின்னர்  ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தார்.


Advertisement