ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது வீண்பழி சுமத்தவில்லை.! இறங்கி வந்த முக்கிய அமைச்சர் !kadampur raju talk about sasikala

தமிழக தேர்தலில் கோவில்பட்டி தொகுதி நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது. ஏனெனில் அங்கு அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்தநிலையில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்தநிலையில், நேற்று கயத்தாறு அருகே வெள்ளாங்கோட்டை, வலசால்பட்டி, சூரியமினுக்கன், திருமங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் செ.ராஜு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது முதல்வரோ, அமைச்சர்களோ, கட்சியினரோ வீண்பழி சுமத்தவில்லை. 

sasikala

இயற்கையாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. 78 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இது ஊர் அறிந்த உண்மை. 
அப்போது முதல்வராக இருந்தது ஓபிஎஸ் தான். பல்வேறு விமர்சனங்கள் வந்ததால், வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காகத் தான் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம். மாறாக நாங்கள் யாரும் மீதும் குற்றம்சாட்டவில்லை என தெரிவித்தார்.