நாம் தமிழர் கட்சி நடத்திய கபடி போட்டி; களத்திலேயே உயிரை விட்ட இளம் வீரர்!!

நாம் தமிழர் கட்சி நடத்திய கபடி போட்டி; களத்திலேயே உயிரை விட்ட இளம் வீரர்!!



kabadi player dead in ground

நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபடி போட்டி ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகே உள்ளது வெண்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 35 அணியினர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

வெள்ளிக்கிழமையை தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த போட்டி நேற்றும் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் வெண்குளம் அணியும், ராமநாதபுரம் அணியும் மோதின. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சாலம் என்பவரது மகன் சூர்யா (21) வெண்குலம் அணிக்காக விளையாடினார். கடலூர் மாவட்டம் டான்போஸ்கோ கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் சூர்யா. இவருக்கு சிறு வயதிலிருந்தே கபடி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது திறமையால் பல்லவேறு அணிகளுக்காக விளையாடி பல பரிசுகளை பெற்றுள்ளார். 

naam tamilar

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் களமிறங்கிய சூர்யா களத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட சக வீரர்கள் சூர்யாவை உடனடியாக ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சூர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உத்திரகோசமங்கை போலீஸார் சூரியாவின் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கபடி விளையாடி கொண்டிருந்தபோதே மயங்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.