மூதாட்டிகளை குறிவைத்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை; மோசடி செய்த இளம்பெண் கைது...!!
மூதாட்டிகளை குறிவைத்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை; மோசடி செய்த இளம்பெண் கைது...!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில், தான் ஒரு தாசில்தார் என ஏமாற்றி, வயதான பெண்களிடம் மூன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கிய இளம்பெண், கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பத்தூரில் வசித்து வரும் சீபா புஷ்பராணி என்ற இளம் பெண் புள்ளரம்பாக்கம், பென்னாலூர் பேட்டை, ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளில் உள்ள, வயதான பெண்களிடம் தான் ஒரு தாசில்தார் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக ஆசை காட்டி வார்த்தை கூறி அவர்களிடமிருந்து தங்க நகைகளை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்து, சீபா புஷ்பா ராணியை கைது செய்துனர்.