சரவணவபவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கு.! மீண்டும் பரபரப்பு புகார் அளித்த ஜீவஜோதி.!

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் புகழ்பெற்ற சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபால், உடல்நலக் குறைவால் கடந்த 2019-ல் உயிரிழந்தார்.
இந்நிலையில், ஜீவஜோதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், வழக்கிற்கு சிறிதளவும் சம்மந்தமே இல்லாத தடா ரஹீம், என்பவர், ராஜகோபால் சிறையில் இருந்தபோது அவருடன் இருந்த ஒரு காரணத்திற்காக என்னைப்பற்றி அவதூராக பேசியுள்ளார்.
தற்போது 3 லட்சம் பேர் பார்த்துள்ள இந்த வீடியோவில், நான் ராஜாகோபாலை ஏமாற்றிவிட்டு பிரான்சிஸ் சாந்தகுமாரை திருமணம் செய்துகொண்டதாக உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை அவர் கூறியுள்ளார். மேலும் என்னைப்பற்றி ஆபாசமாகவும் கமெண்ட் செய்துள்ள இந்த வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட யூடியூப் நெறியாளர் தடா ரஹீம் மற்றும் சேனல் உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.