ஒட்டுமொத்த மக்களும் போராடி மீட்டெடுத்த ஜல்லிக்கட்டு அழிவை நோக்கி செல்கிறது! குமுறும் தமிழர்கள்!

ஒட்டுமொத்த மக்களும் போராடி மீட்டெடுத்த ஜல்லிக்கட்டு அழிவை நோக்கி செல்கிறது! குமுறும் தமிழர்கள்!



jallikattu going wrong way

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 17 ஆம் தேதி உலகபுகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 739 காளைகள் பங்கேற்றன. அங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல காளைகள் மிகச்சிறப்பாக விளையாடி மாடுபிடி வீரர்களை ஓரங்கட்டியது. அங்கு நடந்த ஜல்லிக்கட்டில் நன்றாக நின்று சுற்றி விளையாடும் சிறந்த காளை தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த பின் ஓய்வுபெற்ற நீதிபதி முதல் பரிசினை அறிவித்தார். ஆனால் அனைவரும் எதிர்பார்த்த புதுக்கோட்டை மாவட்டம் பெண் உதவி ஆய்வாளர் அனுராதா அவர்களின் "ராவணன்" காளைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இது தமிழர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

jallikattu

மதுரை புறநகர் மார்நாட் என்பவரின் காளைக்கு முதல்பரிசு அறிவிக்கப்பட்டது. முதல் பரிசை வென்ற காளை நாட்டு காளை இல்லை என்றும் அது ஜெர்சி காளை என்றும் ஜெர்சி காளைக்கு விதியை மீறி முதல் பரிசு கொடுத்தது ஏன் எனவும் விலங்குகள் நல வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் மற்றும் வீர விளையாட்டு மீட்புப் கழகம் ராஜேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாடு உரிமையாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து  இந்த குற்றச்சாட்டை ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்துவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டு மாட்டினத்தை காக்க போராடி கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டில் சத்தமில்லாமல் ஜெர்ஸி காளையை இறக்கியிருப்பதில், சர்வதேச அரசியல் ஒழிந்து இருப்பதாக ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளையை களமிறக்கி அதற்கு முதல் பரிசை கொடுத்திருப்பது ஜல்லிக்கட்டு அழிவிற்கான ஆரம்பம் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதுவும் உலக புகப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இச்சம்பவம் நடந்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் 739 காளைகள் பங்கேற்றன. இதில் பல நாட்டு மாடுகள் துள்ளிக்குதித்து விளையாடியது. அதிலும் புதுக்கோட்டை ராவணன் காளை துள்ளிக்குதித்து விளையாடி மாடுபிடி வீரர்களை ஓரங்கட்டி அசத்தியது. ஆனால் வீரர்கள் பிடித்து தழுவுவதற்கு திமில் கூட இல்லாத ஜெர்ஸி காளையை அனுமதித்ததற்கும், அந்த காளைக்கு முதல்பரிசு அறிவித்ததற்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.