தமிழகம்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்.! வீடுகளை காலி செய்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் ஐடி நிறுவன ஊழியர்கள்.! என்ன காரணம் தெரியுமா?

Summary:

உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை முட

உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை முடக்கியது. கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மக்கள் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து தவிக்கின்றனர். தமிழகத்தில் ஆரம்பத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த மக்கள் பலரும், ஊரை காலி செய்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பினர்.

இதனால் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மாநகரமே வெறிச்சோடி காணப்பட்டது. இதனையடுத்து ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் சிலர் மீண்டும் சென்னையை நோக்கி படையெடுத்தனர். ஆனாலும் பல ஐடி நிறுவனங்கள் இன்றுவரை தொழிலாளர்களை வீட்டிலிருந்தபடியே(work from home) பணிகளை செய்ய அனுமதித்துள்ளனர்.

இதனால் வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் பலரும் அவர்களது சொந்த ஊருக்குச் சென்று வீட்டில் இருந்தபடியே வேலைகளை செய்து வருகின்றனர். ஆனாலும் சென்னையில் வாடகை வீட்டில் இருந்த அவர்களின் பொருட்கள் வீட்லலேயே இருப்பதால் வாடகையை மாதம் தோறும் செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் பொருட்களை மட்டும் வாடகை வீட்டில் வைத்திருந்த ஐடி நிறுவன ஊழியர்கள் வீடுகளை காலி செய்து பொருட்களை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்கின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, கொரோனா பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ளதால், தற்போது எங்களுக்கு நிறுவனங்களை திறக்க வாய்ப்பில்லை. இதனால் தான் வீட்டை காலி செய்து பொருட்களை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்கிறோம் என தெரிவிக்கின்றனர்.


Advertisement