சொந்த ஊருக்கு மூட்டையை கட்டும் ஐடி ஊழியர்கள்.! என்ன காரணம் தெரியுமா.?

சொந்த ஊருக்கு மூட்டையை கட்டும் ஐடி ஊழியர்கள்.! என்ன காரணம் தெரியுமா.?



it employees going to native

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போதுபல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சீனாவில் மட்டும் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 3000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொருத்தவரை 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் சுகாதாரத்துறை கடும் தீவிரமாய் செயல்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் அணைத்து விமான நிலையங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு செய்பட்டு தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் விடுமுறை அறிவித்து வருகின்றன. 

it employees

சென்னையில் அதிகப்படியான மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பல லட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பல நிறுவனங்களில் ஊழியர்கள் நேரடியாக வேலைக்கு வர வேண்டாம் என்று அறிவித்து, ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் வேலை செய்யும் ஐடி நிறுவன ஊழியர்கள் சிலர், அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். அவர்கள் அதற்க்கு கூறும் முக்கிய காரணம், தங்கள் சொந்த ஊரில் சுகாதாரமான காற்று கிடைக்கும், கிராமங்களில் இயற்கையான காற்று, அதிகப்படியான கூட்டம் கூடும் இடங்கள் இருக்காது. இதன் காரணமாக தான் சொந்த ஊருக்கு கிளம்புகின்றோம் என கூறுகின்றனர்.