தமிழகம் இந்தியா லைப் ஸ்டைல் Covid-19

இதுக்கு ஒரு முடிவே இல்லையா?? இந்தியாவில் இரட்டை உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தானது!! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!

Summary:

இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இரட்டை உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது என உல

இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இரட்டை உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது என உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதுவும் நம் இந்தியாவில் கொரோனாவின் கோரோதாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து, நாள்தோறும் பலலட்சம் மக்கள் பாதிக்கப்படும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர்.

இதெற்க்கெல்லாம் எப்போதுதான் ஒரு தீர்வு வரும் என மக்கள் ஏங்கி தவித்திருக்கும்நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக இருப்பதற்கு கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்ட பி.1. 617 என்ற இரட்டை உருமாற்ற வைரஸ்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ்கள் இ484க்யூ, எல்484கே மற்றும் எல்452ஆர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் எல்452ஆர் வகை மிகவும் ஆபத்தானது என கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். ஆரம்பத்தில் தோன்றிய ஒரிஜினல் கொரோனாவை விட, இந்த உருமாற்றமடைந்த எல்452ஆர் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும், எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவிவிடும் எனவும் எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இதில் மேலும் கவலைப்பட கூடிய விஷயம் என்னவென்றால், இந்த வகை வைரஸானது கொரோனா தடுப்பூசிகளுடன் இவை போராடக்கூடியவை என்றும், உடலுக்குள் புகுந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலும் அழித்துவிடும். எனவே இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ், மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது என வகைப்படுத்தி உள்ளதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Advertisement