தஞ்சை பெரிய கோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்ததா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

தஞ்சை பெரிய கோவில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்ததா? வெளியான அதிர்ச்சி தகவல்.!



india - tamilnadu - thanjai pareya koil

தஞ்சை பெரிய கோயில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்து இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயில், தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக இக்கோயில் உள்ளது. அற்புதமான கட்டிடக்கலை, சிற்பக்கலை அம்சத்தைக்கொண்ட இக்கோவில் உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாகவும் உள்ளது. இக்கோயில் கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டினார். 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.

thanjavur

இந்நிலையில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அப்போது அம்மன் சன்னதி கலசம் சாய்ந்து இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கோபுர கலசத்தை உடனே சரி செய்வதுடன், கோபுரத்தில் இருந்த விளக்கையும் எரிய செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகத்தினரிடம் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.