13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
18 வயது நிரம்பியவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல் முகாம்..!

இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் சீர்படுத்த புதிய வாக்காளர்களை இணைக்கும் சிறப்பு முகாம்களை அமைக்க அறிவுறுத்தியுள்ளது . தமிழகத்தில் கடந்த 9 தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணி அடுத்த மாதம் 8 தேதி வரை நடைபெறுகிறது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல், முகவரி மாற்றல் இவற்றுடன் சேர்த்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களை பூர்த்தி செய்து புதிய உரிய ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் வழங்கலாம்.
இந்த நிலையில் பணிக்கு செல்வோரின் வசதிக்காக தமிழகத்தில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் விண்ணப்பதாரர்கள் நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.