கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
பெண் அரசு ஊழியரை தாக்கிய திமுக செயலாளர்.? பிண்ணனி என்ன.?

திருப்பூர் அருகே பணியில் இருந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை திமுக நிர்வாகி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் அமைந்துள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வெள்ளகோவிலை சேர்ந்த முத்துராம லட்சுமி என்பவர் திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் விக்னேஷ் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அங்கன்வாடியில் குழந்தைகள் குறைவாக இருப்பதை கணக்கிட்டு ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் இரண்டு அங்கன்வாடிகளையும் ஒன்றாக இணைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருக்கிறார் முத்து ராமலட்சுமி.
இந்த இரண்டு அங்கன்வாடிகளையும் இணைப்பதில் உடன்பாடில்லாத திமுக வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துராமலட்சுமியை செல்போனில் அழைத்து மிரட்டி இருக்கிறார். இதற்கு முத்துராம லட்சுமி செவி சாய்க்காததால் அவரது அலுவலகத்திற்குச் சென்ற முத்துக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசு ஊழியரான முத்துராமலட்சுமியை தாக்கி இருக்கின்றனர். இதனை தடுக்க வந்த அவரது மாமனாரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கி இருக்கிறது. மேலும் அவர்களை அரசு அலுவலகத்திற்கு உள்ளேயே மூன்று மணி நேரம் பூட்டி வைத்திருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.