தந்தையை அடக்கம் செய்துவிட்டு வந்த மகன்.! ஒரு வாரத்திற்கு பிறகு உயிருடன் திரும்பி வந்த தந்தை.! அதிர்ச்சி சம்பவம்.!



Incident in which the buried father returned home

ஈரோடு மாவட்டம் கோபி, புஞ்சைத்துறையம்பாளையம் அருகே கல்லரைமேடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. 55 வயது நிரம்பிய இவர் கரும்பு வெட்டும் கூலித்தொழில் வேலை செய்துவந்துள்ளார். இவர் தனது மனைவி ஆயம்மாள் மற்றும் இரண்டு மகன்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்துள்ளார். இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன், வேலைக்கு சென்ற மூர்த்தி வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சாலை பகுதியில் 55 வயது ஆண் சடலம் கிடப்பதாக, மூர்த்தியின் மகன்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது மகன்கள் இருவரும் சென்று பார்த்தபோது, இறந்துகிடப்பது தந்தை மூர்த்தி தான் என முடிவு செய்து, அவரது சடலத்தை எடுத்து வந்து,  சுடுகாட்டில் அடக்கம் செய்து, காரியமும் செய்து முடித்தனர்.

இந்நிலையில் இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பினார். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து புதைக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.