புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இராஜபாளையம்: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 150 பக்தர்கள் பத்திரமாக மீட்பு.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர், மேற்குதொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் ராக்காச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தீபாவளி விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் பலரும் கோவிலுக்கு சென்று இருந்தனர்.
ராக்காச்சி கோவில்:
மேலும், ராக்காச்சி கோவில் மலைக்கு அருகில் அமைந்துள்ள அருவி பகுதிகளில், சீசன் நேரங்களில் தண்ணீர் வரத்து இருக்கும் என்பதால், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலரும் அருவிக்கு வந்திருந்தனர்.
இதையும் படிங்க: இராஜபாளையம்: எடுத்தேன் பாரு ஓட்டம்.. பணத்தை இழந்து சுத்துப்போட்ட மக்கள்.. 1 இலட்சத்துக்கு வாரம் ரூ.10 ஆயிரமாம்..!
மாவட்டத்தின் அதிசயம்
விருதுநகர் மாவட்டத்தின் பெரிதும் அறியப்படாத அதிசயம் -
— மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai ) (@MegamalaiS) October 22, 2024
ராக்காச்சி அம்மன் கோவில் ,நேற்று. pic.twitter.com/GJ6kULVpLP
காட்டாற்று வெள்ளம்:
பக்தர்கள் பலரும் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தபோது, மலைமீது பெய்த மழையின் காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுமார் 150 பக்தர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து, தகவலை அறிந்து நிகழ்விடம் விரைந்த இராஜபாளையம் தீயணைப்பு படை வீரர்கள், கயிறு கட்டி பக்தர்களை பத்திரமாக மீட்டனர்.
பக்தர்கள் மீட்பு
விருதுநகரில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயிலில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த 150 பக்தர்கள் பத்திரமாக மீட்பு#Virudhunagar pic.twitter.com/ZPbsTVziVt
— DD Tamil News (@DDTamilNews) November 2, 2024
இதையும் படிங்க: விருதுநகர்: சதுரகிரி மலைக்கு செல்ல தடை; வனத்துறை அறிவிப்பு.. பக்தர்களுக்கு வேண்டுகோள்.!