நெஞ்சு, தலையில் அடித்து கொடூர கொலை.. தந்தைக்கு மகன் செய்த படுபாதகம்.. துடிதுடிக்க பறிபோன உயிர்.!



in Viluppuram Father Killed by Son 

தந்தையை மகன் கொலை செய்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் ஆகவில்லை:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கானை, ஆ. கூடலூர் கிராமத்தில் வசித்து வருபவர் அருணகிரி (வயது 75). இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் மூன்றாவது மகனான மணிகண்டனுக்கு (வயது 40) திருமணம் ஆகவில்லை. பிற நான்கு நபர்களுக்கும் திருமணம் முடிந்து தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!

போதையில் தகராறு:

தற்போது மணிகண்டன் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில், திருமணம் செய்து வைக்காதது தொடர்பாக பெற்றோரிடம் சில ஆண்டுகளாக பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனிடையே, நேற்று முன்தினம் இரவில் வீட்டுக்கு மதுபோதையில் வந்த மணிகண்டன், தாய் லட்சுமி மற்றும் தந்தை அருணகிரி ஆகியோரிடம் திருமணம் செய்து வைக்காதது குறித்து கேட்டுள்ளார்.

Crime news

சிகிச்சை பலனின்றி பலி:

ஒருகட்டத்தில் திடீரென கட்டையால் அருணாகியின் தலை, நெஞ்சில் பலமாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் மயங்கி விழுந்த அருணகிரி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காணை காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: மதுபோதை தகராறால் துள்ளத்துடிக்க பலியான இளைஞர்.. நண்பர்கள் அரங்கேற்றிய வெறிச்செயலால் சோகம்.!