முதலில் அப்பா, அம்மா என்கிட்ட சத்தியம் வாங்குனாங்க..... அப்புறம் தான் விஜய்யை சந்திக்க போனோம்! குஷ்பு மகள் அனந்திகா போட்டு உடைத்த அந்த ரகசியம்.!!!



ananthika-shares-interesting-story-about-meeting-vijay

நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர் சி தம்பதியின் இளைய மகள் அனந்திகா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். விஜய்யை நேரில் பார்க்கச் செல்லும் முன், தனது பெற்றோர் வைத்திருந்த ஒரு சுவாரசியமான நிபந்தனையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

திரைப்படத் துறையில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக செயல்பட்டு வரும் அனந்திகா, அந்த சந்திப்பு தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: என்ன அம்மா நீ? பெற்ற மகளா? தளபதியா? ஐசியூவில் உயிருக்கு போராடும் மகள், விஜய்யை பார்க்க ஓடி வந்த தாய்! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்...!!!

பெற்றோர் வாங்கிய சத்தியம்

‘வாரிசு’ திரைப்படத்தில் குஷ்பு நடித்திருந்தபோது, படப்பிடிப்பு தளத்திற்கு விஜய்யை சந்திக்க அனந்திகா சென்றுள்ளார். அப்போது விஜய்யை நேரில் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழக்கூடாது என்று குஷ்புவும் சுந்தர் சியும் முன்கூட்டியே தன்னிடம் சத்தியம் வாங்கியதாக அவர் கூறியுள்ளார்.

விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்ததால், அவரை நேரில் பார்க்கும் தருணத்தில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர் அந்த நிபந்தனையை விதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

15 நிமிட சந்திப்பு

பெற்றோரிடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியதாக கூறிய அனந்திகா, விஜய்யை சந்தித்தபோது அழவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த 15 நிமிடங்களும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் கடந்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். விஜய்யைப் பார்த்துக் கொண்டே சிரித்துக் கொண்டிருந்ததாகவும், அந்த தருணம் இன்றும் தனது மனதில் பசுமையாக இருப்பதாகவும் அனந்திகா கூறியுள்ளார்.

பேட்டியில் பகிர்ந்த நினைவுகள்

விஜய்யுடனான சந்திப்பு குறித்து அனந்திகா பகிர்ந்த இந்த தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. தங்களது விருப்பமான நட்சத்திரத்தை நேரில் சந்திக்கும் போது ரசிகர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 6 மணிக்கு மேல் விஜய் வீட்டை விட்டு வெளியே வராததற்கு இதுதான் காரணம்...! விஜய்யின் அம்மா போட்டு உடைத்த அந்த ரகசியம்! முதல்வர் ஆன பிறகும் இதே ரூல் தானாம்!!!