மதுபோதை தகராறால் துள்ளத்துடிக்க பலியான இளைஞர்.. நண்பர்கள் அரங்கேற்றிய வெறிச்செயலால் சோகம்.!



in thoothukudi Youth Killed by Friends over Conflict 

போதை தகராறில் நண்பரை வெட்டிக்கொலை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நண்பர்கள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர், ஆனந்த் நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவரின் மகன் செல்வம் (வயது 21). இவரின் மீது அடிதடி உள்ளிட்ட 3 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதே பகுதியில் வசித்து வருபவர் சந்தனராஜ் என்ற சந்து (வயது 22). இவரின் மீதும் அடிதடி உட்பட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அண்ணா நகரில் வசித்து வருபவர் புவனேஷ் (வயது 22). இவரின் மீது மொத்தம் 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தாளமுத்து நகரில் வசித்து வருபவர் மரிய அந்தோணி ஜாய்சன் (வயது 22), நேரு காலனியில் வசித்து வருபவர் ஹரிஹர சுதன் (வயது 22).  

இதையும் படிங்க: மனைவி வெளியே போன கேப்பில் கள்ளக்காதலியுடன் ஜல்சா.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக்கொலை.!

Thoothukudi

சரமாரி வெட்டு:

இவர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், ன்று இரவில் தாளமுத்து நகர் நேரு காலனியில் இருக்கும் காலியான இடத்தில் ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்தி இருக்கின்றனர். அப்போது, போதையில் இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு உருவாகி இருக்கிறது. இந்த சமயத்தில் மாரிச்செல்வம் சந்தனராஜை தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த பிற மூவரும் சந்தனராஜுடன் சேர்ந்து மாரிச்செல்வத்தை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். மேலும், அரிவாளால் சரமாரியாக வெட்டி இருக்கின்றனர்.

Thoothukudi

உயிரிழப்பு:

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சந்தனராஜ் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடிய மாரிச்செல்வத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தனராஜ், ஜாய்சன், ஹரிஹர சுதன் ஆகியோரை கைது செய்தனர். புவனேஸ்வருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!