"இயேசு அழைக்கிறார்" - 28 பேர் கும்பலை சிறைபிடித்த கிராம மக்கள்.. திருச்சியில் பரபரப்பு.! 



in trichy Manaparai Missionary Gang Captured by Local Villagers 

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, பின்னத்தூர் கிராமத்தில், இன்று 28 பேர் கொண்ட குழு சிறை பிடிக்கப்பட்டது.  

மணப்பாறை பகுதியில் கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக 20 பெண்கள், 8 ஆண்கள் என 28 பேரை மக்கள் சிறை பிடித்தனர். 

இதையும் படிங்க: திருச்சி: "ஐயா என்னை விட்ருங்க, உங்க கால்ல விழுறேன், மானம் போயிரும்" - பாலியல் தொல்லை கொடுத்து ஐயோ அம்மா கதறல்.!

வீடு வீடாக மதப்பிரச்சாரம் செய்த நபர்களை பின்னத்தூர் பகுதி மக்கள் சிறை பிடித்து வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு சூழல் ஏற்பட்டது. 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அனைவரையும் அங்குள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆங்கிலேயர்கள் நம்மை படிக்க வைத்தது குறித்து உங்களுக்கு தெரியாதா? என கிறிஸ்துவ பெண் ஒருவர் வாக்குவாதம் செய்துள்ளார். 

ஆங்கிலேயர் படிப்பு சொல்லி கொடுக்கும் அளவு தமிழக சமூகம் வீழ்ந்து கிடந்ததா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காகிதத்தில் அவர்கள் எழுதும் முன்னே ஒலிக்கும், ஆசைக்கும் எழுத்து வடிவம் கொடுத்த மொழி தமிழ் என அவருக்கு யாரவது சொல்லி புரிய வைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: சமயபுரம் பக்தர்களே உஷார்.! பாதயாத்திரை, இறுதி யாத்திரையாக மாறிய சோகம்.!