இனி அந்த பேச்சுக்கே இடமில்லை... பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த OPS...! தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்.!!!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவிய தகவல்களுக்கு நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். தாம் தவெகவில் இணையப் போவதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்றும், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
வதந்திகளுக்கு நேரடி விளக்கம்
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று கூறினார். தன்னைச் சுற்றி பரப்பப்படும் இந்த தகவல்களுக்கு மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்....அதிமுக- தவெக கூட்டணியா? அதிகாரப்பூர்வ விளக்கம்....தவெக பொதுச்செயலாளரின் அதிரடி அறிவிப்பு!!!
புதிய கட்சியில் சேரும் திட்டம் இல்லை
மேலும், ஏற்கனவே ஒரு அரசியல் இயக்கத்தில் இருந்து வெளியேறி மற்றொரு கட்சியில் இணைந்து, தற்போது சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். எனவே தற்போதைக்கு வேறு எந்த புதிய அரசியல் கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என்றும் தவெக தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: இப்படி சொல்லிட்டாரே.... திடீர் ட்விஸ்ட்.! அதிமுக கூட்டணியில் இணையும் அமமுக? சற்று முன் பரபரப்பு பேட்டி..!!!