சிறுமிக்கு மது கொடுத்து வன்கொடுமை.. திருச்சியில் திடுக்கிடவைக்கும் சம்பவம்.. பட்டப்பகலில் பகீர்.!



in Trichy a Driver Rapes 16 YEar Old Girl 

திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் 16 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் திருநங்கை ஆவார். திருச்சியில் உள்ள கல் மந்தை காலனி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சிறுமியுடைய திருநங்கை சகோதரர் சென்றுள்ளார். இந்த வீட்டில் பிற திருநங்கைகளும் இருக்கின்றார்.

காரில் அழைத்துச் சென்றார்:

இதனிடையே, சிறுமி தனது சகோதரனை பார்க்க நேற்று முன்தினம் மதியம் அங்கு சென்றுள்ளார். அச்சமயம் பாக்கியா என்ற திருநங்கையை காரில் அழைத்துச் செல்ல ஓட்டுநர் மாரிச்செல்வன் (வயது 43) என்பவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சிறுமியை பார்த்த மாரிச்செல்வன், அவரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். சுமார் மாலை 5 மணியளவில் சிறுமியை அவர் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!

மயங்கி கிடந்த சிறுமி:

சுமார் ஒன்றரை மணிநேரம் கழித்து, மாலை சுமார் 06:30 மணியளவில் சிறுமி கீரைக்கடை பஜார் பகுதியில், போதையில் சுயநினைவு இன்றி கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அதிகாரிகள் நேரில் வந்த நிலையில், சிறுமியின் சகோதரர் மற்றும் திருநங்கைகளும் வந்துள்ளனர்.

trichy

சரமாரித்தாக்குதல்:

சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமிரா ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சிறுமியை மாரிச்செல்வன் அழைத்துச் சென்றது உறுதியானது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் மற்றொரு சகோதரன், தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு மாரிச்செல்வனை கண்டுபிடித்து சரமாரியாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் மாரிச்செல்வனின் தலை, கால், முகத்தில் கடும் காயம் ஏற்பட்டது. இவர்கள் மாரிச்செல்வத்தை தாக்கும் காரணம் அறிந்து கொதித்துப்போன பொதுமக்களும் அவரை புரட்டியெடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு சூழல் தொற்றிக்கொள்ள, காந்திமார்க்கெட் காவல்துறையினர் மாரிச்செல்வனை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

அரங்கேறிய கொடுமை:

மாரிச்செல்வன் சிறுமிக்கு கட்டாயப்படுத்தி மதுவை கொடுத்து காரிலேயே வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து மாரிச்செல்வன் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான மாரிச்செல்வனுக்கு திருநங்கைகளுடன் தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெஞ்செல்லாம் பதறுதே.. உடலில் காயங்கள்., ரத்தக்கறையுடன் வீடு திரும்பிய 7 வயது சிறுமி.. தின்பண்டம் ஆசை காட்டி இளைஞர் செய்த கொடூரம்.!