பாப்பா.. தாத்தா கூட வா லட்டு தாரேன்.. பேத்தி வயதுள்ள சிறுமியிடம் செய்யும் வேலையா இது? போக்ஸோவில் கைது.!



in Tirupattur 62 Year Old Arrested Pocso Act 

 

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிழட்டு காமுகன் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சண்முகம் (வயது 62). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, மகன்-மகள் என குழந்தைகள் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: காவலருக்கே இந்த நிலைமையா? பெண் காவலரின் 11 சவரன் தாலி சங்கிலி பறிப்பு; வாகனத்தில் செல்லும்போதே பகீர்..!

மனைவி மட்டும் இயற்கை எய்திவிட, சண்முகத்தின் பிள்ளைகள் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். 

பாலியல் தொல்லை

இவரின் வீட்டில் நெல்லிக்காய் மரம் இருப்பதாக தெரியவருகிறது. சம்பவத்தன்று, அதே பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுமி, நெல்லிக்காய் பறிக்க சென்றுள்ளார். 

Tirupattur

அப்போது, சிறுமியை அழைத்த சண்முகம், லட்டு தருவதாக வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி அழுதபடி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அவர்கள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சண்முகத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

இதையும் படிங்க: 24 வயது இளைஞரின் உயிர் நொடியில் பறிபோன சோகம்.. ஆம்பூரில் துயரம்.. கலங்கவைக்கும் வீடியோ.!