Sexual Abuse: பள்ளி மாணவி கர்ப்பம்.. காமுக பூசாரி அதிர்ச்சி செயல்.. வயிற்றிலேயே இறந்த சிசு.!
வீட்டு வேலைக்கு ரூ.200 சம்பளம் தருவதாக சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு. இவர் அங்குள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள பகுதியில் வசித்து வரும் பள்ளி மாணவி, குடும்ப வறுமை காரணமாக கிடைத்த வேலைக்குச் சென்று பள்ளியில் படித்து வந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை:
இதனிடையே, தனது வீட்டை சுத்தம் செய்யும் வேலை இருப்பதாகவும், சுத்தம் செய்து கொடுத்தால் ரூ.200 பணம் தருவதாகவும் சிறுமியை பூசாரி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை மிரட்டி அவர் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தொழுகை சொல்லிக்கொடுப்பதாக 13 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை.. மசூதியில் அதிர்ச்சி செயல்.!

சிறுமி கர்ப்பம்:
காமுக பூசாரியின் கொடூர செயலால் கர்ப்பமான சிறுமியின் வயிற்றில் கரு வளர்ந்து அது 2 மாதத்தில் இறந்துள்ளது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டபோது விபரீதம் அம்பலமானது.
இதனையடுத்து, தர்மபுரி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூசாரி ரமேஷ் பாபுவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.