'அம்மா போன இடத்துக்கே போயிடலாம் தம்பி' மனைவி இறந்த துக்கத்தில் நடந்த சோகம்.. கண்ணீரில் உறவினர்கள்.!



in Cuddalore a father Killed 7 Year Old Son and dies by Suicide 

மகனுடன் தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சோகம் நெய்வேலியில் நடந்துள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி, வடக்குத்து, அண்ணா கிராமம், அரசமரத்தெருவில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவரின் மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ராஜின் மனைவி பவித்ரா (வயது 24). 

இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பயங்கரம்.. வயலில் நடந்தது என்ன? கிருஷ்ணகிரியை அதிரவைக்கும் கொடூரம்.!

7 வயது சிறுவன்:

கடந்த 2020ம் ஆண்டு பவித்ரா குடும்பப்பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தம்பதிகளுக்கு 7 வயதுடைய ஜெகதீஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். தற்போது பள்ளி திறப்பு தொடங்கியுள்ள நிலையில், மூன்றாம் வகுப்பு செல்ல ஆயத்தமாகி இருக்கிறார். 

துள்ளத்துடிக்க கொலை & தற்கொலை:

இதனிடையே, நேற்று முந்தினம் இரவில் வீட்டில் இருந்த தந்தை-மகன் எப்போதும்போல சாப்பிட்டு உறங்கி இருக்கின்றனர். நள்ளிரவில் எழுந்த ராஜ் கத்தியால் மகனின் கழுத்தை அறுத்து துள்ளத்துடிக்க கொலை செய்துள்ளார். பின் சமையல் அறைக்குச் சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.Crime news

 

வாட்ஸப்பில் மெசேஜ்:

மேலும், இந்த நிகழ்வுக்கு முன்னதாக தனது சகோதரிக்கு ராஜ் வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். அதனைப்பார்த்து அதிர்ந்துபோன தங்கை மற்றும் உறவினர்கள் காலையில் வந்தபோது சிறுவன் சடலமாக இருந்தார். அதனைக்கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். 

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சமையல் அறையில் ராஜ் சடலமாக இருந்துள்ளார். பின் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நெய்வேலி காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் கணவர் மகனை கொலை செய்து பின் தானும் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

இதையும் படிங்க: பாஸ்புக்கை ஏண்டா தொலைச்ச? கண்டித்த தாய்.. விபரீத முடிவெடுத்த 17 வயது சிறுவன்..!