#BREAKING: வடலூரில் கொடூரம்.. முகத்தை சிதைத்து கொடூரமாக 25 வயது பெண் படுகொலை.. சடலம் மீட்பு.!



in Cuddalore 25 Year Old Girl Decomposed Body Recovered 

இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாலம் பணிகள்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர், கண்ணுத்தோப்பு பாலம் விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது. இந்த பாலம் தற்போது விரிவாக்க பணிகளில் இருக்கிறது. இதனால் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிங்க: காலியான சரக்கு பாட்டில்.. அருகில் கிடந்த சடலம்.. தூத்துக்குடியில் திக்., திக் சம்பவம்.!

சடலம் மீட்பு:

இதனிடையே, மணலில் புதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இங்கு அரைகுறையாக புதைக்கப்பட்டு இருந்துள்ளது. மணலில் புதைக்கப்பட்ட சடலத்தின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. கால்களை அடையாளம் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cuddalore

பெண் யார்?

இந்த சடலம் தென்பட்டது தொடர்பாக மக்கள் அளித்த தகவலின் பேரில் நேரில் வந்த வடலூர் காவல்துறையினர், தடயவியல் ஆய்வாளர்கள் உதவியுடன் விசாரணையை முன்னெடுக்க இருக்கின்றனர். பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை.

25 வயது பெண்:

பெண்ணை இங்கு அழைத்து வந்து கொலை செய்தனரா? அல்லது வேறு எங்கேனும் கொலை செய்து உடலை இங்கு புதைத்தனரா? என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்படுகிறது. முதற்கட்டமாக பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.