காலியான சரக்கு பாட்டில்.. அருகில் கிடந்த சடலம்.. தூத்துக்குடியில் திக்., திக் சம்பவம்.!
கல்லறைத்தோட்டத்தில் காலியான மதுபாட்டிலுடன் இளைஞர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் இருந்தது:
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டேட் பாங்க் காலனி முல்லை நகர் பகுதியில், சிஎஸ்ஐ கல்லறை தோட்டம் இருக்கிறது. இங்கு சம்பவத்தன்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் இருந்தது. இது குறித்து உள்ளூர் மக்கள் தூத்துக்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொழுகை சொல்லிக்கொடுப்பதாக 13 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை.. மசூதியில் அதிர்ச்சி செயல்.!
கொலை?
இதனையடுத்து, நேரில் வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, வாலிபரின் கழுத்து, தாடை பகுதியில் வெட்டுக்காயத் தென்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதை உறுதி செய்தனர்.
அதிகாரிகள் விசாரணை:
மேலும், அவரின் உடல் அருகே காலியான மதுபாட்டில், வாட்டர் பாட்டில் இருந்துள்ளன. இதனால் இறந்தவர் குடிபோதையில் நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என விசாரணை நடந்து வருகிறது. அவர் யார்? என்று தொடர் விசாரணை நடந்து வருகிறது.
மேலும், தோட்டத்திற்கு அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பார்க் உள்ளது. அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கரும்புக்கட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட இளம்பெண் சடலம்.. தேடி அலைந்த உறவினர்களுக்கு திடுக் துயரம்.!