அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
#Breaking: தந்தை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை.. வாட்ஸப்பில் தகவல்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்.. சென்னையில் பயங்கரம்.!
அதிகாலை நேரத்தில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்த பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள ஏழுகிணறு பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஷ். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். தற்போது ஏழுகிணறு பகுதியில் தங்கியிருந்து, மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை அவிழ்த்து பொது இடத்தில் ஜஸ்டின் செய்த செயல்.! அலறித்துடிக்க ஹாஸ்பிடலில் அனுமதி.!
இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 18 வயதுடைய ரோஹித் என்ற மகன் இருக்கிறார். அவ்வப்போது சொந்த ஊர் சென்று வருவது வழக்கம். அவ்வாறாக சொந்த ஊர் செல்லும்போதெல்லாம், ஜெகதீஷ் தாய் மற்றும் குடும்பத்தினரிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சில நேரம் மனைவியை கடுமையாக தாக்குவதையும் தொடர்ந்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த 2 மாதமாக ஜெகதீஷுடன், அவரின் 18 வயது மகன் ஹரிஸும் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
இரத்த வெள்ளத்தில் பயங்கரம்
இந்நிலையில், இன்று அதிகாலை தந்தை - மகன் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், இரும்பு கம்பியால் தந்தையின் தலையில் பலமாக தாக்கி ரோஹித் கொலை செய்தார். இதனால் வீடெல்லாம் இரத்த வெள்ளத்தில் நிறைந்தது.
இதனை வீடியோ எடுத்து தனது தாய்மாமா வங்காராம் என்பவருக்கு வாட்ஸப்பில் அனுப்பி, தான் விமான நிலையம் சென்று வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ந்துபோனவர், ஏழுகிணறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜெகதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சொந்த ஊர் செல்வதாக கூறிய ரோஹித்தை, சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், தந்தை எப்போதும் தாயை தாக்குவதால் கொலை செய்ததாக கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: படிப்பு சொல்லிக்கொடுத்த பள்ளியிலேயே கைவைத்த திருட்டு இளைஞர்கள்.. 2 பேர் கைது.!