சந்தைக்கு போறேண்ணு சொல்லிட்டு வந்தியே... 3 வயது மகளை நெஞ்சில் கட்டி அணைத்தபடி உயிரை மாய்த்த 25 வயது தாய்! தலையில்லாமல் கிடந்த 2 சடலங்கள்... அதிர்ச்சி சம்பவம்!!!



madhya-pradesh-mother-and-child-train-suicide

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் இளம் தாய் ஒருவர் தனது 3 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியாத நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தைக்குச் சென்றதாக கூறிவிட்டு வெளியேறிய தாய்

போலீசார் தெரிவித்த தகவலின்படி, கபூரி கிராமத்தைச் சேர்ந்த நிஷாந்த் ஜாட்டின் மனைவி பிராச்சி ஜாட் (25), சம்பவத்தன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் தனது 3 வயது மகள் பிரனிஷாவுடன் சந்தைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் ஒன்றரை மணி நேரத்தில் இருவரும் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சமாதானமாக பேசி அம்மா வீட்டில் இருந்த மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்த கணவன்! இரவு கொடூரமாக தாக்கி... தூக்கில் தொங்கவிட்டு மாமனார், மாமியாருக்கு போட்ட வீடியோ கால்! பகீர் சம்பவம்!!!

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசாரும் பொதுமக்களும், தாய் தனது மகளை இறுதிவரை நெஞ்சோடு அணைத்தபடி தலை இல்லாம இருந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரயில் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரிலேயே போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

காரணம் குறித்து தீவிர விசாரணை

இந்த வழக்கில் தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பெண் வீட்டார் மற்றும் கணவர் தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பான அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உறவினர்களை உலுக்கிய சோகம்

இந்த துயரச் சம்பவத்தால் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தகவலின்படி, சம்பவ இடத்தில் இருந்த உறவினர்களில் ஒருவர் மனவேதனையில் ரயில் முன் பாய முயன்றதாகவும், அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: கொஞ்சி குழாவி காதலனுடன் போனில் பேசிய தாய்..! அம்மா அம்மான்னு கூப்பிட்ட 3 வயசு குழந்தை.... ஆத்திரத்தில் அடுத்த நொடி குழந்தையை செய்த கொடூரம்! அதிர்ச்சி சம்பவம்!!!