கள்ளகாதலின் உச்சம்.! விஷம் குடித்த புதுமாப்பிள்ளை.! பரிதவிக்கும் இரண்டு குடும்பம்.!

கள்ளகாதலின் உச்சம்.! விஷம் குடித்த புதுமாப்பிள்ளை.! பரிதவிக்கும் இரண்டு குடும்பம்.!


illegal affairs couple suicide

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். 25  வயது நிரம்பிய இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை அள்ளும் வாகனம் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை இருந்த சுபாஷ் என்பவரின் மனைவி என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்தநிலையில் வித்யாவுக்கும் சுரேஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 குழந்தைகளுக்கு தாய் என்பதை மறந்த வித்யா, சுரேஷ்குமாருடன் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சுரேஷ்குமாரின் பெற்றோருக்கு தெரிந்ததையடுத்து சுரேஷ்குமாரை கண்டித்து, உனக்கு பேரூராட்சி வேலை வேண்டாம் என கூறி வேறு வேலைக்கு அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து பெற்றோரின் பேச்சை கேட்டு சுரேஷ்குமார் பேரூராட்சி அலுவலக வேலைக்கு செல்லாமல் வேறு வேலைக்கு சென்றுள்ளார். ஆனாலும் சுரேஷ்குமார் அவரது கள்ளக்காதலியை யாருக்கும் தெரியாமல் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுரேஷ்குமாருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர்.

இந்தநிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமாருக்கு திருமணம் நடந்தது. தற்போது சுரேஷ்குமாரின் மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில மாதங்கள் கள்ளக்காதலியை சந்திக்காமல் இருந்த சுரேஷ்குமார், பின்னர் மீண்டும் வித்யாவை தொடர்பு கொண்டு அவரை சந்தித்து இருவரும் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று வந்தனர்.

illegal affairsஇவர்களின் கள்ளக்காதல் விவகாரம் வித்யாவின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் வித்யாவை கண்டித்துள்ளார். இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் மாயமானார்கள். சுரேஷ்குமார், வித்யா இருவரும் மாயமானது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் கூடங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கூடங்குளம் சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் சுரேஷ்குமார், வித்யா இருவரும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்தநிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் உயிரிழந்தார். வித்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தங்களின் சுய சந்தோஷத்திற்க்காக அப்பாவி இரண்டு குடும்பங்கள் தவித்து வருவது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.