சென்னையில் பரபரப்பு! விடுதி அறையில் அழுகிய நிலையில் மாணவியின் உடல் கண்டெடுப்புIIT madras phd student suicide in hostel

ஜார்கண்டை சேர்ந்த சென்னை ஐஐடி மாணவி அரை கதவை தாழிட்டு  தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் உடல் அறையிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

ஜார்கண்டை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னை ஐஐடி கல்லூரியில் உலோகவியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள சபர்மதி என்ற விடுதியில் தங்கி தனது ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அறை கதவை உள்பக்கமாக தாழிட்டு அறைக்குள் இருந்த அவர் வெளியில் வரவே இல்லை என சக மாணவிகள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று காலை அந்த மாணவியின்  அறை அருகே சென்ற மற்ற மாணவிகள் ஒருவித துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தனர். இதனால் அந்த மாணவிகளுக்கு ஒருவித சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவர்கள் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து விடுதிக்கு வந்த காவல்துறையினர் பூட்டியிருந்த அறையை திறந்து பார்த்த பொழுது அந்த மாணவியின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த போலீசார் அந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறியுள்ளனர். மேலும் அந்த மாணவி இறந்ததற்கான காரணத்தை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது அறையை பரிசோதித்த போலீசாருக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.