ஓடும் காரில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்! சிசிடிவி கேமராவில் சிக்கிய கணவனின் வெறிச்செயல்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

ஓடும் காரில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்! சிசிடிவி கேமராவில் சிக்கிய கணவனின் வெறிச்செயல்!


கோவை மாவட்டத்தை சேர்ந்த அருண் - ஆர்த்தி தம்பதியினருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில் தனது கணவரை பிரிந்து மும்பையில் வசித்து வந்த ஆர்த்தி, அங்கிருந்தபடியே விவாகரத்து கோரியிருந்தார். ஆனால், குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என நீதிமன்றம் அறிவுரை வழங்கியதையடுத்து, தனது வேலையை விட்டு ஆர்த்தி கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார். ஆனாலும் அருண், தொடர்ந்து ஆர்த்தியிடம் வரதட்சணை கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கோவையில் உள்ள ஆர்த்தியின் தங்கை வீட்டிலிருந்து ஆர்த்தியை சென்னைக்கு அழைத்து சென்ற அருண், சிறிது தூரம் சென்றவுடனேயே கொலைசெய்யும் நோக்கில் தனது பெற்றோருடன் சேர்ந்து அவரை காரிலிருந்து கீழே தள்ளியுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த ஒரு வீட்டின் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. காரிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த ஆர்த்தி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo