13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
கள்ளக்காதலனுடன் கையும் களவுமாக சிக்கிய மனைவி... காதல் கணவரின் வெறிச்செயல்!!

சிவகாசி மாவட்டம் விசுவநத்தம் காகா காலனியை சேர்ந்தவர் பாண்டி செல்வம் - ரூபா தம்பதியினர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பாண்டி செல்வம் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். ரூபா அருகே உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே பட்டாசு ஆலையில் கருப்பசாமி என்ற இளைஞர் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது ரூபாவுக்கும், கருப்பசாமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. சம்பவத்தினத்தன்று பாண்டி செல்வம் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ரூபா, கருப்பசாமியை இரவு வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். அதிகாலை வீடு திரும்பிய பாண்டி செல்வத்துக்கு மனைவி கள்ளகாகாதலனுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதனையடுத்து கோபமான பாண்டி செல்வம் கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதலன் கருப்பசாமியை கட்டையால் தாக்கி அடித்து உதைத்துள்ளார்.
இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டி செல்வம் மற்றும் ரூபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.