வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
மனைவியின் நடத்தையில் சந்தேகம்... ஒரு நொடி பொழுது கோபத்தால் நிகழ்ந்த அசம்பாவிதம்... கதறி துடிக்கும் பிள்ளைகள்!!
ராணிப்பேட்டை நவல்பூர் தியாகி மாணிக்கம் பகுதியில் வசித்து வருபவர் சுலைமான் - மும்தாஜ் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சுலைமான் அந்த பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் திடீரென சுலைமானுக்கு மும்தாஜின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்று சுலைமானுக்கும் மும்தாஜ்க்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த சுலைமான் ஷூ லேசால் மனைவி மும்தாஜ் கழுத்தை இறக்கி இருக்கிறார். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.
அதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரியவரவே போலீசார் சுலைமானை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மும்தாஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர்.