கணவனுக்கு தெரியாமல் தன்னைவிட வயது குறைந்த இளைஞனுடன் ஏற்பட்ட உறவு! கணவன் செய்த வெறிச்செயல்!

husband killed young boy for his eife illegal affair


husband-killed-young-boy-for-his-eife-illegal-affair

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நாராயணபுரத்தை சேர்ந்த விக்னேஷ்குமார் என்பவருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் திருமணமாகியுள்ளது. கணவன், மனைவி இருவருக்குமே 26 வயது ஆகிறது. திருமணமான சில மாதங்களில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

விக்னேஷ்குமார் சிவகாசியிலும், தனலட்சுமி சாத்தூர் பகுதியிலும் வசித்து வந்தனர். தனலட்சுமிக்கும், அதேப் பகுதியில் வசிக்கும் தன்னைவிட ஒருவயது குறைந்த சதிஷ் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியதாக கூறப்படுகிறது.

illegal affair

இந்நிலையில், நேற்று இரவு விக்னேஷ்குமார் திடீரென சாத்தூர் பகுதியில் உள்ள தனலட்சுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சதீஷ் மற்றும் தனலட்சுமி இருவரும் ஒன்றாக இருந்ததை விக்னேஷ் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், தனலட்சுமியின் வீட்டிலே வைத்து சதீஷை கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 

விக்னேஷ் கல்லால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சதீஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சதீஷை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தனலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய விக்னேஷ்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.