38 வயது கணவனை விட்டுவிட்டு 64வயது நபருடன் வாழ்ந்துவந்த பெண்! பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம்! பகீர் சம்பவம்!

38 வயது கணவனை விட்டுவிட்டு 64வயது நபருடன் வாழ்ந்துவந்த பெண்! பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம்! பகீர் சம்பவம்!


husband-killed-wife-for-her-illegal-affair

சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல்முருகன். 38 வயது நிறைந்த இவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி லட்சுமி. இவருக்கு 34 வயதாகிறது. இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் லட்சுமிக்கு அவரது வீட்டிற்கு அருகே காவலாளியாக பணிபுரிந்துவரும் 62 வயது நிறைந்த கோவிந்தசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 

 இதுகுறித்து லட்சுமியின் மகளுக்கு தெரியவந்த நிலையில் அவர் இதுகுறித்து தனது அப்பாவிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து , செந்தில் வேல்முருகன் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வேலை எதுவும் இல்லாததால் செந்தில் வேல்முருகன் வருமானமின்றி தவித்து வந்துள்ளார். இதனால் லட்சுமி மற்றும் செந்தில் வேல்முருகனுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

illegal affairs

இந்நிலையில் 20 நாட்களுக்கு முன்பு லட்சுமி கோபித்துகொண்டு கோவிந்தசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு சென்று செந்தில் வேல்முருகன் அழைத்ததற்கு, லட்சுமி இனி வாழ்ந்தால் கோவிந்தசாமியுடன்தான் என கூறியுள்ளார். மேலும் லட்சுமியும் கோவிந்தசாமியும் வேல்முருகனை கடுமையாக அடித்து விரட்டியும்  உள்ளனர். இதனால் அவமானமடைந்த வேல்முருகன் அதிகாலையில் பெட்ரோல் வாங்கி சென்று கோவிந்தசாமி மற்றும் லட்சுமி மீது ஊற்றி தீயை கொளுத்தியுள்ளார்.பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயில் எரிந்து கொண்டிருந்த லட்சுமி மற்றும் கோவிந்தசாமி இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் அங்கு லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கோவிந்தசாமி 60% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.