மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய நடிகை! நிறைமாத கர்ப்பிணி இப்படி செய்யலாமா? மகாநதி சீரியல் வீடியோ...



mahanadhi-actress-escapes-from-hospital

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் தற்போது பரபரப்பாகச் செல்லும் நிலையில், அதில் நடித்துள்ள வெண்ணிலா கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் மேலும் கவனத்தை பெற்றுள்ளது.

மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடும் காட்சியில் நடித்து வரும் நடிகை வைஷாலினி, இப்போது நிறைமாத கர்ப்பிணி என்பதாலும் இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அதிகமாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சீரியலில், விஜய்-காவேரி திருமத்திற்கு பிறகு, பழைய காதலியான வெண்ணிலா மீண்டும் விஜய்யை தேடி வருகிறார். விஜய்யை திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்த வெண்ணிலா, தன்னையே இழந்துவிட்டு மாடியில் இருந்து விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இதையும் படிங்க: வில்லனை கதறவிட்ட அரசி! இதுதான் என் நோக்கம்! கோவத்தில் என்ன செய்கிறார் பாருங்க! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ...

இந்த நிலையில், விஜய் தான் வெண்ணிலாவை கொலை செய்ய முயன்றார் என கூறி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவேரி தன்னுடைய கணவரை காப்பாற்ற முயற்சி செய்யும் போது, வெண்ணிலாவை மருத்துவமனையிலிருந்து தப்பித்து அழைத்துச் செல்கிறார்.

இந்நிலையில், வயிற்றில் குழந்தையுடன் ஓடும் வெண்ணிலா காட்சிகள், சின்னத்திரை ரசிகர்களிடம் பரவலான வியப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: அய்யோ.. சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் இறந்துவிடுகிறாரா! இனி குடும்பத்தின் நிலை என்ன! பரபரப்பான திருப்பங்களுடன்...