இப்படி கூட வேடம் அணிந்து வருவாங்களா! பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற சிறுமிகள்! திடீரென கேட்ட அலறல் சத்தம்! சில நொடியில் அந்த சிறுமிகளிடம்... பதறவைக்கும் சம்பவம்!



child-kidnap-attempt-disguised-as-transgenders

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம், வசாய் தாலுகாவின் கோச்சிவாடே கிராமம் அருகேயுள்ள ஒரு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்தபின் 3 சிறுமிகள் மற்றும் 1 சிறுவன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, அதிர்ச்சிக்குள்ளாக்கும் கடத்தல் முயற்சி நிகழ்ந்தது.

திருநங்கை வேடம் மற்றும் கத்தி மிரட்டல்:

அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் பயணித்த நபர்கள் மூவர், திருநங்கைகள் போல வேடமணிந்து, தங்களிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டியபடி, குழந்தைகளை கடத்த முயன்றுள்ளனர். திடீரென நடந்த இந்த சம்பவம், சிறுவர்களை பயமுறுத்தியது. அவர்கள் உடனடியாக சத்தமிட்டு உதவிக்கேட்டதையடுத்து, அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் குற்றவாளிகளை மடக்கினர்.

குற்றவாளிகளை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியபின், பால்கர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மூன்று பேர் திருநங்கை வேடம் அணிந்து குழந்தைகளை கடத்த திட்டமிட்டது உறுதியாகியுள்ளது. மேலும், ஆட்டோ டிரைவர் இந்த திட்டத்தில் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. பால்கர் போலீசார் 4 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: Video : வெள்ளநீர் தேங்கிய குளம்! வித்தியாசமான மஞ்சள் கலரில்! குதித்து விளையாடி, கூவிக் குரலில் ஒரே சத்தம்! பக்கத்தில் சென்று பார்த்து ஷாக்கான மக்கள்! வைரலாகும் வீடியோ....

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கேள்விகள்:

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பும் இந்த சம்பவம், பெற்றோர் மற்றும் பொது மக்களை அதிக அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

இதையும் படிங்க: சுற்றுலா பயணத்தில் அன்னாபெல் பேய் பொம்மை! ஹோட்டலில் மர்மமாக இறந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரர்! திடீரென மாயமான அன்னாபெல் பொம்மை! அதிர்ச்சிகரமான சம்பவம்!