சுற்றுலா பயணத்தில் அன்னாபெல் பேய் பொம்மை! ஹோட்டலில் மர்மமாக இறந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரர்! திடீரென மாயமான அன்னாபெல் பொம்மை! அதிர்ச்சிகரமான சம்பவம்!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள கெட்டிஸ்பர்க் நகரத்தில், பிரபலமான அமானுஷ்ய புலனாய்வாளர் டான் ரிவேரா (வயது 54) கடந்த வாரம் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன், அவர் வழிநடத்திய ‘டெவில்ஸ் ஆன் தி ரன்’ பேய் சுற்றுலா நடைபெற்றது. அந்த நிகழ்வு சோல்ஜர்ஸ் தேசிய அனாதை இல்லத்தில் நடந்தது.
இந்த சுற்றுலாவில், உலகப் புகழ்பெற்ற அன்னாபெல் (Annabelle) எனப்படும் சபிக்கப்பட்ட பொம்மையும் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில், ரிவேரா இறந்த ஹோட்டல் அறையில் இருந்து அன்னாபெல் பொம்மை காணாமல் போனது. இதை ஆடம்ஸ் கவுண்டி மரண விசாரணை அதிகாரி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ரிவேரா, முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் என்பதோடு, எட் மற்றும் லோரெய்ன் வாரன்கள் தொடங்கிய நியூ இங்கிலாந்து சைக்கிக் ரிசர்ச் சோசைட்டியின் உறுப்பினராக இருந்தார். அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: உலகில் 60 ஆண்டுகள் குளிக்காமல் வாழ்ந்த மனிதன்! முதல் முறையாக குளித்தவுடன் நடந்த அதிர்ச்சி! வினோதமான சம்பவம்...
1970ம் ஆண்டு ஒரு நர்சிங் மாணவியிடம் வந்த அன்னாபெல் பொம்மை தொடர்ந்து அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணமாக கருதப்படுகிறது. தற்போது, ரிவேராவின் மரணம் மற்றும் அன்னாபெல் பொம்மையின் மாயம், அமெரிக்காவில் பேய் பரப்புரைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: Breaking: பயணிகளுடன் தீ பிடித்து எரியும் சொகுசு கப்பல்! மரண பயத்தில் அடுத்தடுத்து கடலுக்குள் குதித்து! வீடியோ வெளியாகி பரபரப்பு..